உலகில் இன்று வரை leadership quality என்பது பிறப்பிலேயே உருவாவதா...அல்லது வளர்ப்பு முறையில் உருவாக்கப்படுவதா என்று இன்று வரை விவாதங்கள் முடிவுக்கு வராமல் இருந்துக் கொண்டு தான் உள்ளது. இதே 'முரண் வாதம்' போல் தான் நமது இப்போதைய இலக்கிய விவாதமும். 'தலைமைப்பண்பு' விவாதம் போலவே ..இலக்கியமும் இயற்கையாகவே படைக்கப்படுகிறதா அல்லது 'இலக்கியமாக' உருவாக்கப்படுகிறதா ? இரண்டுமே நடப்பதாகத் தோன்றுகிறது..! "சுயம்பும்" உண்டு...இராமலிங்க அடிகளாரை இதற்க்கு உதாரணமாக கூறலாம்..அவர் எந்த ..எந்த ..இலக்கியங்களை refer செய்தார்...அவர்தம் படைப்பிற்கு..?
அதுபோல் திருவள்ளுவரை எடுத்துக்கொண்டால் .., அவரது திருக்குறள் பற்பல புலவர்களின் நீண்ட கால உழைப்பில் உருவான தொகுப்பாகவும் இருக்கலாம் என ஒரு கருத்து உண்டு . இது தர்க்கவியல் ! ஆனாலும் இலக்கியத்தின் norms & conditions தெரிந்த திருவள்ளுவர் அரும்பாடுபட்டு சேகரித்து தொகுத்து நமக்கு வழங்கியுள்ளார்!.இது சாதாரண விஷயம் இல்லை ..அவரை great literary administrator எனக் கொள்ளலாம்!
எப்படி இருந்தாலும் இந்த இருவர் மட்டும் அல்லாமல் .. தொன்றுதொட்டு 'கம்பராமாயணம் முதல் இப்போதைய 'எக்சைல்' வரையிலான படைப்புகள்
மக்கள் நல்வாழ்விற்கே படைக்கப்பட்டன ! ஒரு படைப்பின் மூலம் ஒரே ஒருவன் பயனடைந்தாலே...அந்த படைப்பு இலக்கியம் தான் !
மண் பயனுற..மாநிலம் பயனுற..படைக்கும் எதுவுமே இலக்கியம் தான்...!
No comments:
Post a Comment