Monday, 11 March 2013

காதல் ..... கள்ளக் காதல்

ஒரு Romantic பதிவு !

' இருவர் ' படத்தில் பிரகாஷ்ராஜ் கதாபாத்திரம் யாரை குறிப்பிடுகிறது என்கிற அரசியலுக்கு போகாமல், காதலை மட்டும் பார்க்கலாம் !

பிரகாஷ்ராஜ் ஒரு திருமணமான அரசியல்வாதி , இலக்கியத்திலும் ஈடுபட்டு புதினங்கள் படைப்பவர் ! இலக்கியத்தில் ஆர்வமுள்ள இளம்பெண்ணான 'தபு ' பிரகாஷின் படைப்புகளால் மனம் கவரப்படுகிறாள் ! ஒரு ரயில் மறியல் போராட்டத்தின் போது ..... எதற்கும் அஞ்சாமல் ரயிலின் முன் படுத்திருக்கும் அவரின் நெஞ்சுறுதியை பார்த்து மையலும் கொள்கிறாள் ! அண்ணலும் ...அவளும்.... நோக்கினார்கள் ....காதல் வயப்பட்டார்கள் ! பிறகு கடிதம் மூலம் தொடர்கிறது !

ஒரு நாள், தபு அவருடனேயே நிரந்தரமாக வசித்திட கிளம்பி வந்து விடுகிறாள் ! பிரகாஷ்ராஜின் சகாக்கள் தபுவை ஒரு வீட்டிற்கு அழைத்து செல்கிறார்கள் ...அங்கு காத்திருக்கிறார்.... பிரகாஷ்ராஜ் ஆவலுடன் வருகிறார்....தேடுகிறார்....கையில் புத்தகத்துடன் ஒரு படியில் அமர்ந்தவாறு , தபு அவரை நிதானமாக பார்த்துக் கொண்டிருக்கிறார் ! பார்வையிலேயே நிறைய பேசுவார் ....எனக்கு புரிந்தது .."பாவி...இப்படி மனசுக்குள் புகுந்து வேதனை படுத்துகிறாயே ".... உன்னை நம்பி வந்துட்டேனே ... என்ன ஆகுமோ ", என்றெல்லாம் விழிகளால் பேசுவார் !

கொஞ்சம் நினைத்துப் பாருங்கள் ....ஒரே முறை சந்தித்தது தான்....பேசியது கிடையாது ....வெறும் கடித தொடர்பு மட்டும் தான் ! மனதில் குடியேறியவரின் வீட்டிற்கு .... வாழ்நாள் குடிவாசியாக .... ஊர்,சுற்றத்தார் அனைவரையும் விட்டு விட்டு ஒரு நம்பிக்கையில் வந்து விட்டார் ! நம் ஊர் நியாயப்படி இந்த விஷயம் "கள்ளக்காதல்."..."அவளை தொடுப்பா வச்சிருக்கான் ",என்கிற மாதிரியான விஷயம் ! மணி சார் இந்த விஷயத்தை கவித்துவமாக கொண்டு போயிருப்பார்....இம்மி பிசகினாலும் கதாபாத்திரங்களின் மதிப்பு போய் விடும்! ஆனால் மணி கலக்கி இருப்பார்....தபுவின் நடிப்பும் நன்றாக இருக்கும்.

பிரகாஷ்ராஜ் தயங்கி ....பின்னர் நிதானமாக நெருங்கி "செந்தாமரை ", என்று அடித்தொண்டையில் ...மிக்க காதலுடன் அழைப்பார் ! அதற்கு அவள் கொடுக்கும் ஏக்கப் பார்வை பதிலில் புரிந்துக் கொண்டு இன்னும் நெருங்கி அருகே வருவார் ! (காதலின் போது .....காதலுடன்,'ஹஸ்க்கி வாய்ஸில்' காதலன் அல்லது காதலி பெயரை சொல்வது ஒரு முக்கிய கடமைன்னு நினைக்கிறேன் . நான் கூட அப்படி try பண்ணேன்...நல்ல பலன் கிடைத்தது ...நீங்களும் பண்ணிப் பாருங்க ...முடிஞ்சா , இப்பவே உங்களுக்கு ரொம்ப பிடிச்சவங்க பெயரை சொல்லிப் பாருங்க....கிக்கா இருக்கு இல்லே !)

பிறகு பிரகாஷ்ராஜ் ,தபுவை பற்றி ....அவரை தேடிய கதை பற்றி .... சொல்லிக் கொண்டே ...காலோடு கால் உரசி அமர்வார் ! (இதுவும் ரொம்ப முக்கியம் ... டக்கென்று உட்கார்ந்தால் விலகி விடுவர்...பேசிக்கொண்டே உட்காரும் போது தேவதைகள் விலகுவதில்லை ) இனிமே தான் படமே...வசனங்களை பாருங்கள் !

பிரகாஷ்ராஜ் ,"பைத்தியம் எனக்கு மட்டும் தானான்னு தெரியனும் ....மெட்ராசுக்கு வந்துடுன்னு நான் கடிதம் எழுதனதும் எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு வந்துட்டே ...ஏன் ? ".

தபு," உங்க நாலு வரி கவிதையினாலே ".,.., "வர சொல்லி கடிதம் போட்டீங்க ..வந்துட்டேன்... அம்மாவையும்,அப்பாவையும் எதிர்த்து ....படி தாண்டி வந்துட்டேன் .....ஆனா, நான் இங்கே யாரு ?".

ஏற்கனவே திருமணமான ஒருவன் என்ன பதில் சொல்ல முடியும் ?.... பிரகாஷும் சற்று அதிர்ந்து ...பின் சமாளித்து , மொழியால் விளையாடுவார் !

"என் காதலி ....என் கண்மணி ....என் ஸ்நேகிதி !", என்பார் ... ரொம்ப சாதுர்யமாக !

மெல்ல அதிர்வார் தபு ...."அட பாவி ...ஜாலக்காரா...மனைவி என்கிற சொல்லை தவிர எல்லா சொல்லையும் சொல்கிறாயே .... இனி எங்கு செல்வேன்....இந்த ஜென்மத்தில் இது தானோ என் வாழ்க்கை ",என்று கண்களாலேயே பேசி .... சுய பரிதாபம் மேலிட....தன் நிலை எண்ணி ,கண்ணீரை அடக்க முயன்று, முடியாமல் ... சாளரத்தில் சாய்ந்து அழுவார் ! எல்லாம் ஒரு சில வினாடிகள் தான்...பிறகு துக்கத்தை காதல் சாப்பிட்டு விடும் !

சற்றே அழுகையை முழுங்கி விட்டு .... தலை சாய்த்து , சிரிப்பொன்றை உதிர்த்து விட்டு.... ஒரு காதல் பார்வை பார்ப்பார் பாருங்கள் .... CLASS !!! பார்வை சொல்லும், " டேய் திருடா...உன் தமிழால் என்னை சிறை பிடித்து விட்டாயே !".

அப்புறம் அடுத்தது நேரா மேட்டர் தான் ! ஆனா ..இந்த தடவை கவிதையை 'அதுக்கு' பிறகு தான் சொல்வார் பிரகாஷ்ராஜ் !

"உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் , மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே !"

"தொண்ணூறு நிமிடங்கள் தொட்டணைத்த காலத்தால் , எண்ணூறு ஆண்டுகளாய் இதயத்தில் கலக்குதடி !"
.
.
.
"இலக்கணமே பாராமல் எல்லா இடங்களிலும் முத்தங்கள் புதைத்த மோகத்தில் சில நிமிடம் "
.
.
"ஆடை கலைந்தேன் ....வெட்கத்தை நீ அணைத்தாய் ! "
.
.
என்றெல்லாம் ...அற்புதமாய் வைரமுத்து வரிகள் சென்றுக் கொண்டிருக்கும் ! காந்தர்வ காதல் திருமணம் !!

எதுக்கு இவ்வளவு நீ....ளமாய் கதைச்சேன்னா ,ஒரு கருத்து சொல்லத் தான் ! கல்யாணத்துல காதல் செத்துப் போய்விடுவதாக உணருகிறேன் ! அதை துக்கமாகவோ....வேறொரு மாற்றமாகவோ எண்ணிக் கொள்வது அவரவர் .......

'தல' பாரதி கூட அதை வைத்துத் தான் சொன்னாரோ.... " காதல்....காதல்....காதல் ! காதல் போயின் , சாதல் ...சாதல் ....சாதல் !!

திருமணத்தில் முடிவதல்ல காதல் .... ஏனென்றால் திருமணம் முடிந்த பிறகு ,இல்லற வாழ்க்கைக்குச் செல்லும்போது அங்கு கதாபாத்திரம் மாறுகிறது !
காதலன் - காதலி என்பது போய் ...கணவன் - மனைவி வந்துடும் டும்...டும்...டும் ! அங்கே எண்ணம், செயல்,பேச்சு அனைத்தும் வேறொரு பரிமாணத்திற்கு சென்று விடுகிறது.அதிலொன்றும் தவறில்லை .... ஆனால் அங்கு காதலின் சுவாரஸ்யங்கள் , சின்ன சின்ன சந்தோஷங்கள் , சகிப்புத்தன்மை போன்ற பல விஷயங்கள் காணாமற் போய் விடுகின்றன ! காதலின் போது பெரிதாகத் தெரியாத விஷயங்கள் பிறகு பூதாகரமாகத் தெரியும் ! பெரிதாகத் தெரிந்த விஷயங்கள் பின்னர் சில்லரைத்தனமாகத் தெரிய ஆரம்பிக்கும் !

உதாரணங்கள் வேண்டுமா...

கல்யாணத்திற்கு முன்பு ie ., க.மு.:-"ஒரு காபி கூட போடத் தெரியாம என் இளவரசி வளர்ந்திருக்கா ! "

க.பி :- "ஏண்டி , குழம்பாடீ வச்சுருக்கே ? உப்பு தான் சீப்பாக் கிடைக்குதுன்னு கொட்டிட்டியா ?"

Equal Rights ...So , இன்னொரு க.மு:- "உன் அம்மாவை நான் மாமியாரா நினைக்காம ,என் அம்மாவா தாண்டா நினைப்பேன் !

க.பி :- "ஏன் ..உங்கம்மாவுக்கு நீங்க மட்டும் தான் புள்ளையா ... உங்க அண்ணன் - அண்ணி வீட்ல வச்சுக்க மாட்டாங்களா?"
ஆக, ஆச்சரிய ' குறியா' (letters) முன்னாடி இருந்தது ...பின்னாடி கேள்விக்குறியா மாறுது !

விஷயம் என்னன்னா ... கல்யாணத்துக்கு முன்னாடி, காதல் தனி..... வாழ்க்கை தனி , கல்யாணத்துக்கு அப்புறம் ரெண்டும் ஒன்னாகுது ...அங்க தான் பிரச்சினையே ! Mis-understood with the fusion ! காதலும் வாழ்க்கையும் ஒன்றாக இருப்பதை புரிந்துக் கொள்ளவும் முடியாமல் ... பிரித்துப் பார்த்தாலும் குழப்பமும் ....சண்டையும் தான் !

"அதெல்லாம் இல்லை ,நாங்கள் அப்ப இருந்த மாதிரியே தான் இப்பவும் இருக்கிறோம்னு", சொல்றவங்க வாய்க்கு போஜனம் கிடைக்காது !

இதுல 'தாவான்னு' ஒன்னு இருக்கு ...ஏதோ பாத்திரமுன்னு நினைக்காதீங்க , 'தாலி கட்டா வாழ்க்கை' ! அதில் இந்த "அடி ..புடி " பிரச்சனை எல்லாம் இல்லை ! யாரும் யாரையும் விரட்ட முடியாது ....அப்படியே Maintain பண்ணலாம் !

"ரஜினி ரசிகையா நீ ? , ஒரு தடவை போட்ட உப்பு ...நூறு தடவை போட்ட மாதிரி இருக்குன்னு", ஜோக்கடிக்கலாம் ஜாலியா !

திருமணத்தின் போது ஏற்படும் மாற்றங்களை ஏற்றுக்கொண்டால் பிரச்சனையில்லை...ஆனால் ஏற்றுக்கொண்டு ,கடமைக்கு வாழ்வதற்கும் .... ரசனையோடு அனுபவித்து வாழ்வதற்கும் வித்தியாசமிருக்குமன்றோ....

நான் சொல்ல வரும் விஷயம் புரிந்துக் கொள்ள முடிகிறதா....

என்னுடைய சிறு வயது முதல் ஒரு பெண்மணியை கவனித்து வந்திருக்கிறேன் ...சாயங்காலம் 7 மணி அளவில் எங்கள் வீட்டை கடந்து செல்வார்...கையில் தூக்கு கூடையோடு . மாநிறமாய் இருந்தாலும்,மிக களையாக ... அகல குங்குமப் பொட்டு வைத்துக் கொண்டு .... நறுவிசாக உடுத்திக் கொண்டு செல்வார்.அவர் தினமும் செல்லும் இடம் பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு அலுவலகத்துக்கு என்று பிற்பாடு தெரிந்தது.நானும் ஒரு முறை ஊருக்கு செல்ல பெற்றோருடன் காத்திருந்த போது ,பேருந்து நிலைய அலுவலக அதிகாரி ஒருவருக்கு உணவு பரிமாறிக் கொண்டு ,சிரித்து பேசிக் கொண்டிருந்ததை பார்த்தேன்.அவர் எங்கள் தெருவைக் கடந்தால் மணி சரியாக 7 என்று அர்த்தம் .... தெருவுக்கே அவர் நடமாடும் மணி காட்டியாக விளங்கினார்.புயல் ,மழை என்று எந்த நாளாக இருந்தாலும் அவர் வருவது நிற்காது....தீபாவளி போன்ற விடுமுறை தினங்கள் தவிர.! ஆனால் விடுமுறைக்கும் மறுநாள் , சற்று பெரிய தூக்கில் உணவு செல்லும்.நான் அசந்து போய் விடுவேன், பள்ளி வாழ்க்கை முதல் என் கல்லூரி இறுதி வரை , ஏன் அதற்கு பிறகு என் வேலை முடிந்த விடுமுறை தினங்களில் கூட பார்ப்பேன், தொடர்ந்து பல வருடங்கள் ! மனைவி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்...மோட்டார் தொழிலில் இரவு வேலையில் இருக்கும் தன் கணவருக்கு ,சூடாக உணவைக் கொடுப்பதற்கு ,ஒரு நாள் கூட தவறாமல் இவ்வளவு கடமை உணர்வுடன்...இல்லை...காதல் உணர்வு இருக்க வேண்டும்,என்றெல்லாம் நினைத்து பெருமைப்படுவேன் அந்த பெண்மணியை பற்றி !
ஒரு நாள் அவருக்கு உடல் முடியவில்லை போல ,சைக்கிளில் ஒரு அண்ணன் அவரை அழைத்துப் போய்க் கொண்டிருந்தார் ,பெண்மணி சோர்வுடன் கேரியரில் உட்கார்ந்திருந்தார் ! சைக்கிள் ஓட்டிக் கொண்டு சென்றவர் அவர் மகன், அந்த சூழ்நிலையில் கூட இவர் தன் கையால் உணவு பரிமாற போய்க் கொண்டிருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் !

எங்கள் கடைக்கே அந்த அண்ணன் வேலைக்கு சேர்ந்தார் , அவரைப் பார்க்க அவரின் ஊரை சேர்ந்த சில சில பையன்கள் வருவர்...அவர்கள் சொன்ன ஒரு விஷயம் எங்கள் வீட்டில் அனைவருக்கும் பெரிய அதிர்ச்சியாக இருந்தது ! அந்த அதிகாரி அவரின் கணவரே அல்ல....அவரது கணவர் ஊரிலேயே விவசாயம் செய்பவர் அதாவது அந்த அண்ணணின் அப்பா !?.பருவ வயதில் இருவரும் காதலித்து உள்ளனர்...ஆனால் வீட்டின் எதிர்ப்பினால் திருமணம் வேறொருவரோடு முடிந்து விட்டது ! இருப்பினும் அந்த பெண்மணி...தன கணவருக்கு அனைத்து விபரங்களையும் கூறி இருக்கிறார் ! அவர் கணவரும் அதை 'புரிந்துக்' கொண்டு , சந்திக்க...உணவு எடுத்து செல்ல அனுமதித்திருக்கிறார் ! ஆனால் இவர்களின் சந்திப்பு அந்த அதிகாரியின் மனைவிக்கு தெரிந்து , அதிகாரியின் மொத்த குடும்பத்தினரும் அவரை எதிர்த்து ,ஒதுக்கி விட்டனர் ! வீட்டு உணவு என்றால் அந்த பெண்மணி கொண்டு வருவது தான் , உறவினர்கள் என்றால் ..அந்த அண்ணனும் , பெண்மணியின் கணவரும் தான் அவருக்கு ! ஏனையோர் அவரின் நண்பர்கள் மட்டுமே .... சில வருடங்களுக்கு முன்பு அந்த அதிகாரி நோயில் படுத்திருந்து ... இறந்ததற்கும் முதல் நாள் வரை அந்த பெண்மணி மருத்துவமனைக்கு உணவை எடுத்து வந்து ஊட்டி விட்டு தான் செல்வார் !

காதலில் என்ன கள்ளக்காதல் .... நல்ல காதல் .... காதல் அவ்வளவு தான் !!

இருவர் படத்தின் அந்த காட்சியின் தொடர்ப்பு : http://www.youtube.com/watch?v=6ZH2x42v-xY

No comments:

Post a Comment