Thursday, 7 March 2013

அவ்வா

மகளிர் தினத்திற்காக ..,


நான் பார்த்து ...ரசித்து... பழகிய, ஒரு அழகியப் பெண்ணை பற்றியதொரு மீள் பதிவு !


ரங்கவ்வாவை பார்க்க நல்ல நிறத்துடனும்.. அஜானுபாகுவான தோற்றத்துடனும் இருப்பார்கள் ...முழுப் பெயர் ரங்கநாயகி பாட்டி ! ...நாங்கெல்லாம் 'ஆய் அவ்வா' என்றும் கூப்பிடுவதுண்டு.ஏன் அப்படி கூப்பிடுகிறோம் என்பது இனி வரும் பத்தியில் புரிந்துக் கொள்வீர்கள்! முகம் வந்து மகாலட்சுமிக் கணக்கா இருக்கும் அவ்வா. . . வாயத் தொறந்தா மட்டும் சும்மா தூய தமிழ் வார்த்தைகளாகத் தான் கொட்டும். ஊரிலிருந்து நான் வந்து ,அவரை பார்க்க சென்றவுடனேயே என்னை வரவேற்பதே.."வாடா ஒக்கால ஒழி .. ங்கொப்பன் ... ங்கோத்தா..எப்படி இருக்காங்க !" என்று தான்...வரவேற்பு இருக்கும் ..! முதலில் அதிர்ந்து...பின்...பழகி..பழகி...எனக்கு மட்டும் இல்லை.,ஊர் .. உலகத்துக்கே பழகிடுச்சு..! கெட்ட வார்த்தை என்றவுடன் ஏதோ கடமைக்கு என்று நாலு வார்த்தை மட்டும் இல்லை....அவ்வாவிடம் .. அதற்கென்று ஒரு தனி அகராதியே உண்டு..! நித்தம் ஒரு புதிய வார்த்தை என்பது போல் புது ..புது ..கெட்ட வார்த்தைகள் வந்து விழும் ! சும்மா வார்த்தை . . . என்றில்லாமல் அதில் அதீத கற்பனா சக்தி ...ரசனையுடன் கலந்திருக்கும்.! (ஒம் பு....டையில என் ஒழவு மாடு ஒழு...க) இது போன்ற வண்டை..வண்டயான வார்த்தைகள் ..அற்புதமாக வந்து விழும். கோபமா ..இருந்தாலும் சரி...குணமா இருந்தாலும் சரி...அவ்வாவுக்கு ஒவ்வொரு வார்த்தைக்கும் 'இனிசியல்' மாதிரி ஒரு 'வண்டை' வார்த்தை இருக்கும். இப்படி எல்லாம் பேசறதாலே அவங்களை நீங்க யாரும் 'சொர்ணா அக்கா' ரேஞ்சுக்கு வில்லியா பாக்காதீங்க ..!.., அவ்வளவு அன்பும் அவங்ககிட்டே கொட்டிக் கிடக்கும் ..! சுத்தி இருக்குறவங்க யாருக்கு என்ன கஷ்டம்னாலும் ...அதே வண்ட ..வண்ட..வசவுகளோட...உதவிக்கிட்டுத் தான் இருப்பாங்க ! ( புள்ள குடிக்கலைன்னாலும்...அந்த பயல வுட்டு உறிய சொல்லலாம் தானே...இப்ப பாரு பால் கட்டிகிச்சு..!) என்றெல்லாம் திட்டியபடி தேவையான வைத்திய முறை அல்லது பணம் கொடுத்து டவுன் ஆஸ்பத்திரிக்கு அனுப்புவார்கள். இது போல் ஏக ..அநேக உதவிகள்..! இதனால் பாட்டி ஒரு பேரிளம் அரசக் குமாரி போல் எங்கள் கிராமத்தில் வாழ்ந்து வந்தார்.


என்னதான் அரசக்குமாரி மரியாதை என்றிருந்தாலும், அரசரான தாத்தாவிடம் அவர் மிக அடக்கத்துடன் நடந்துக் கொள்வார் என்று நாம் நினைத்து விடக் கூடாது...தாத்தாவுக்கே செம 'கவுண்ட்டர்' கொடுப்பார்! தாத்தாவும் பவுசு இறங்கி விடாமல் ,அவரும் எதிர்த்து பதிலடியாக வார்த்தையும் ..சில சமயம் அடியும் கொடுத்து விடுவார். அவ்வாவைப் பார்க்கும் போது, தாத்தா கட்டுமஸ்த்தாக இருந்தாலும் சற்று குள்ளமாகவே இருப்பார்...கொஞ்சம் இளையவர் மாதிரி ..! ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டு ...இருவருக்கும் நடக்கும் போர் ..இருக்கிறதே ..அது மிக ரசித்து ஊராரால் பார்க்கப்படும்! இருவரும் மாற்றி..மாற்றி..திட்டிக் கொள்ள ..( போடா பொண்டாட்டி சா...ட நக்குனவனே..!....போடி தே..மவளே..!) தாத்தாவுக்கு அதிக கெட்ட வார்த்தைகள் தெரியாததால் அந்த ஒரே வார்த்தையையே வெவ்வேறு modulation ல் ,அதை நீட்டி முழக்கி சொல்லிக் கொண்டிருப்பார்! இதையும் ஏதோ திருவிழா கதாகலாட்சேபம் போல் ஊரே நின்று ரசித்தபடி வேடிக்கைப் பார்க்கும். அது ஒரு மிகப் பெரிய entertainment ஆக மக்களுக்கு இருந்தது ! ஊர் மக்களே சில சமயம் இருவரையும் 'கிண்டி' விட்டு வேடிக்கை பார்ப்பதும் உண்டு..! எனக்கு என்னமோ, அந்த சண்டையும் ..கெட்ட வார்த்தை பரிமாற்றங்களும் .., கூடலுக்கும் முன்னால் ஒரு warm up என்றுத் தோன்றும்..! அது தாத்தா பாட்டிக்கு மட்டும் என்றில்லாமல் வேடிக்கைப் பார்க்கும் ஊருக்கும் ஒரு warm up என்றே தோன்றும். (ஊரில் தியேட்டர் ..டிவி என்றெல்லாம் கிடையாது ...தாத்தா மட்டும் கொக்கோக சாஸ்திரம் என்ற பழைய புத்தகத்தை ...படம் பார்த்துக் கொண்டிருப்பார்!) ஏனெனில் சண்டை நடந்துக் கொண்டிருக்கும் போதே தாத்தா கோபத்துடன் சரக்கடிக்க போய் விடுவார்...அங்கு போய் நல்லா ஏத்திகிட்டு.., கடையிலோ அல்லது வழியிலோ மல்லாந்து கிடப்பார் ..! ஆனா இப்படி 'சண்ட' போட்ட பாட்டி, ஒண்டி ஆளா தேடிப் போய் தாத்தாவை அலேக்காக தூக்கி ....தோளில் போட்டுக் கொண்டு வந்துக் கொண்டே இருப்பார்..! அவ்வளவு அன்பு..! இதில் என்ன sex warm up என்போர்க்கு.....பாட்டியின் மூத்த புத்திரியான என் பெரியம்மாவும் ..பாட்டியும் ..சில மாத இடைவெளியில் ...குழந்தைப் பெற்றார்கள்..! என் கடைசி சித்தி என்னை விட இளையவர்..! ஆனால் என் பாட்டி இதைப் பற்றி கிஞ்சித்தும் கவலையின்றி வலம் வருவார்..! (எம்பு ...யில நான் முட்ட போட்டேன்..உங்க கொட்ட பருப்புக்கு என்ன வந்தது..?)


தாத்தா இறந்தப் பிறகு சிறிது காலம் அவர் வருத்தத்தில் அமைதியாக இருந்தார்..பின் விரைவிலேயே பழைய கலகலப்பு திரும்பி..மறுபடியும் ..கெட்ட வார்த்தை புராணம் தான்...சற்று முதிர்ச்சியோடு..! அது போல் இப்போது அவரும் சரக்கடிக்க ஆரம்பிச்சிட்டார் ...1 /2 தான் கேட்பார்...கொடுத்ததும் ..அது என்ன பிராண்ட் ..ரம்மா..விஸ்கியா...என்றெல்லாம் பார்க்காமல் ஆசையுடன் வாங்கிப் பிரித்து, எதுவும் கலக்காமல் முதலில் ஒரு மிடறு ஊற்றிக் கொண்டு மிட்டாய் போல்..சப்பி..சப்பி .. முழுங்குவார்.


எந்த கல்யாணக் காட்சி முடிஞ்சாலும் ..அன்னிக்கு இரவு முதல் ராத்திரிக்கு பொண்ணு ...மாப்பிள்ளையைப் போய் ‘பாக்குறத்துக்கு’ முன்னாடி அவ்வாவைப் பாக்கச் சொல்லுவாங்க ...அவ்வாக்கிட்டே பேசுன கொஞ்ச நேரத்திலேயே பொண்ணு முகம் சிவந்து ..ஒரு வேகத்தோடு முதலிரவு ரூமுக்குள்ள நுழைஞ்சுடும்..! என்னா வகுப்பு எடுப்பாங்களோ..?


ஒரு மாதத்திற்கு முன்பு அவ்வாவுக்கு உடல்நிலை மிகவும் சரியில்லாததால் என் பெற்றோர் பார்ப்பதற்கு சென்றிருந்தனர் ...என்னிடம் பேச வேண்டும் என்றதால் ..என் அம்மாவிடமிருந்து செல்லில் அழைப்பு வந்தது .நான்.." அவ்வா..எப்படி இருக்கீங்க...எல்லாம் சரியாயிடும்..கவலைப்படாதீங்க..!". அதற்கு அவ்வா, " டேய் ஒன்னும் சரியில்லடா...அந்த 'பொண்டாட்ட..ஒழு ....வன்' (தாத்தா) பக்கத்திலயே நிக்கிறான்...எமப்பய வேற ,பூ...முறுக்கி தோள்ள போட்டுக்கிட்டு வந்துக்கிட்டு இருக்கான்டா..நான் தேற மாட்டேன்னாங்க." நான் ஆறுதல் சொல்லி விட்டு ,பின் எப்போதும் போல் என் அலுவல்களை ? பார்க்க ஆரம்பித்து விட்டேன்.பின்னர் 4 நாட்கள் கழித்து அவ்வா இறந்து விட்டதாக தகவல் வந்தது..!

No comments:

Post a Comment