Tuesday, 5 March 2013

நர மாமிசம்

வானம் முன்பைக்கும் சற்று கருமை கூடியிருந்தது .....உலகமே வெட்ட வெளியாயிருந்தது ......ஆங்காங்கே ஒரு சில பழைய கட்டிடங்களும் . தென்பட்டன.மற்றப்படி எங்கு காணினும் ...... எலும்புக் கூடுகள் ....மண்டை ஓடுகள்....பிணங்கள் ...பிணங்கள்...அழுகிய பிணங்கள் தான் !பிணங்களின் கடைசி துணுக்குகளை தின்றுக் கொண்டு முழு எலும்புக் கூட்டின் பிறப்பிற்கு வழி வகை செய்யும் அந்த உயிரினங்கள் ...ஓ ...நாய்கள் ! பல்லாயிரக்கணக்கான வருடங்கள் மனிதனை பின் தொடர்ந்து ஓடி ....இதோ அந்திம காலம் வரை வந்திருக்கிறது !

ஒவ்வொரு ஊரின் நடுவேயும் மிகப் பெரிய கோட்டை இருக்கிறது .....பல ஆண்டுகளுக்கு முன்னால் நாட்டை ஆண்டோரின் வாரிசுகளுக்கான இடம் அது !அந்தக் கட்டிடமே ஒரு மிகப் பெரிய மருத்துவமனை தான் ! பிறக்கும் குழந்தையே 108 வியாதிகளுடன் தான் பிறக்கிறது.....அத்தனை மருத்துவ வசதிகள் இருந்தும் நூற்றுக்கு 10 தேறினாலே அதிசயம் தான் ! இறந்தாலும் ஒன்றும் பிரச்சனையில்லை .....அது என்றாவது நடக்கும் விருந்தில் முக்கிய இடம் பிடிக்கும் ! குழந்தைக் கறி தான் எப்போதாவது.....மற்றப்படி இன்றைய தினத்தில் மனித மாமிசம் மட்டும் தான் தங்கு தடையின்றி கிடைக்கிறது ! நேற்று கூட ஒருவன் ..."பல நாட்கள் சாப்பிடவில்லை ....ஏதேனும் உதவுங்கள்", என உயிரை விடத் துணிந்து...கட்டிடத்தின் வாசலில் பலகீனமாக கேட்டான்....பிறகு அவனுக்கு நல்லுணவுகள் கொடுக்கப்பட்டு .... பின்னர் அவனிடம் கையொப்பமமும் வாங்கிக் கொண்டு ..... செரிக்க சில ஷணங்கள் கொடுத்து ...மலம் வரும் முன்பே வெட்டப்பட்டு ... துண்டுகளாக்கப்பட்டான் .துண்டுகளாக்கும் போது மலத்தைப் பிரித்து கறியை சுத்தம் செய்ய நேரம் ஆகிறது என்று நாற்றம் பொறுக்காத சமையற்காரர்கள் காரணம் சொன்னதால் இந்த ஏற்பாடு !இதிலும் சிறந்த இன்னொரு பலியும் உண்டு! போன வாரம் ஒருவன் குடும்பத்தோடு வந்திருந்தான் ....இதே பசி கதை .....நெடுந்தூரத்திலிருந்து வந்திருப்பார்கள் போல .....அவனைத் தவிர அனைவரும் மயங்கி சாய்ந்தனர்....மனைவி , இரு பெண் குழந்தைகள் !

வெளியில் தான் உணவுக்கு மாந்தர்கள் ......கட்டுப்பாடில்லாமல் அடித்துக் கொண்டு....கொன்று....கொன்று வாழ்கிறார்கள்.ஆனால் கோட்டையில் வசிக்கும் ஆண்ட வாரிசுகள் (இவர்களை இனி சுருக்கமாக ஆ.வாக்கள் ) எல்லாவற்றையுமே முறைப்படி தான் செய்வார்கள் .....உணவுக்காக உணவாகும் மனிதனிடம் ...நியாயமான தஸ்தாவேஜுகளில் கையெழுத்து வாங்கிக் கொண்டு தான் கொல்வார்கள். ...பதப்படுத்தப்பட்ட கறிகளுக்கு மேற்கிலிருந்து வரும் ஆட்களிடம் ஆதாரம் காட்ட வேண்டும் ...இல்லையெனில்...,இருக்கும் பெண்பிள்ளைகளை அழைத்து சென்று விடுவர்....எதிர்த்தால்.....சிறு கடுகென இருக்கும் மருந்தை எறிந்தால் ...மொத்த கட்டிடமும் தரை மட்டம் !

இன்றளவும் தமது முன்னோர்களை நினைத்து பேரானந்தம் கொள்வர் ஆவாக்கள் ! பின்னே....இன்னும் 30 தலைமுறைக்கு.... இன்றும் மிச்சமிருக்கும் உணவுப் பொருட்களும் ....தண்ணீர் ஆதாரங்களும் இவர்களுக்கு மட்டுமே என்று .! குடும்பத்துடன் வந்த மனிதன் வறுமையிலும் ஓரளவு சதைப்பற்றுடன் இருந்ததால் .....ஆவாக்களுக்கு ஒரு யோசனை தோன்றியது....எத்தனை நாளைக்கு தான் சதைப் பற்றில்லாத ...வெறும் எலும்பில் ஒட்டியிருக்கும் சதையை கடித்துக் கொண்டிருப்பது எவ்வளவு வேதனையான விஷயம் !வாழ்நாள் முழுதும் அவன் குடும்பத்திற்கு உணவிட ...உறுதிப் பத்திரம் தயார் செய்யப்பட்டு....அவனுக்கு நல்லமுது படைக்கப்பட்டு....உடல் உள்ளேயும் நன்கு எரிய... எண்ணெய் சொட்ட...சொட்ட பலகாரங்கள் கொடுக்கப்பட்டு தீக்குளிக்கப்பட்டான் !

கறி நன்கு வெந்திருந்தது ....நீண்ட நாட்களுக்குப் பிறகு....ஆவாக்களுக்கு நல்லதோர் விருந்து ! அவன் மனைவி மக்களுக்கும் கரிசனமாக ...அவனின் விரை கொட்டையும் , குத சதையும் முறையே பரிமாறப்பட்டு....தாய் ஒரு மூலையிலும் ...பிள்ளைகள் ஒரு மூலையிலும் பிரிக்கப்பட்டனர் !இனி தாய்க்கு ஓய்வு ஒழிச்சலில்லாமல் வேலை இருக்கும் ....தொடர்ந்து அவள் மேல் இயங்கிக் கொண்டிருப்பனர்....தலைமை மருத்துவர் சொல்லும் நாள் வரை....பின்னர் குழந்தை பெற்று முடித்ததும் .....அடுத்த இயக்கங்கள் தொடரும் ! ஜீவ உருவாக்க சக்தி இருக்கும் வரை தான் அவள் ஜீவன் இருக்கும் ...பிறகு...அவளை விருந்தில் காணலாம் ! பெண்பிள்ளைகளைப் பொருத்தவரை ...அவை மிகப் பெரிய சொத்துக்கள்....அவை பருவமெய்த அடுத்த நொடியிலிருந்து வேலை பளு கூடி விடும்....ஆவாக்களின் வயோதிக வாரிசுகளுக்கு...மாற்று உறுப்புக்கும்.....பாதுகாப்புக்கு வீரர்கள் உருவாக்கவும் .....குழந்தைகள்..குழந்தைகள் ..நிறைய ...நிறைய தேவை ! வெளியில் உணவுக்கு வேட்டையாடப்படுவதால் ...ஆவாக்களின் உடல் வேட்கைக்கு ஒத்துக்கொண்டு கோட்டை வாசலை அண்டுவர் !

காலங்கள் சென்றன....ஆவாக்களின் வாரிசுகள் குறைய ஆரம்பித்தனர்....அவர்களின் ரத்த சம்பந்தம் இல்லாத ஒரு படை கோட்டையிலேயே உருவாகியிருந்தது....உள்கோட்டைப் போர் உருவாயிற்று...! பிடிக்கப்பட்ட எதிர்ப்பாளர்கள் உயிருடன் தோலுரிக்கப்பட்டு....அவர்களின் எதிரிலேயே அவரவர் உறுப்புகள் வெட்டப்பட்டு..... ஒவ்வொன்றாக உண்ணப்பட்டன.! எதிர்த்த பெண்களின்...தொடை,கால் ,கைகள் மட்டும் ,வெட்டப்பட்டு ...ஏனைய உடல் பாடம் செய்யப்பட்டு .....பருவ வயது ஆவாக்களின் விளையாட்டு பொம்மைகளாக்கப்பட்டன.நிலவறையிலிருந்த மேற்கத்திய வெடிபொருட்களை திருடி வைத்து எதிர்ப்பாளர்களும் சளைக்காமல் போரிட்டனர் ! அதிலும் பெண்கள் ....தத்தம் மலப் புழையில்.... வெடிமருந்து அடங்கிய குழாயை சொருகி ...காலை விரித்துப் படுத்துக் கொள்வார்கள்....புழை என்பது போய் ...ஏதேனும் துவாரம் இருந்தால் போதும் என்று ரத்தம் அருந்திய மயக்கத்தில் ஆவாக்கள் நெருங்குவர் . அவளின் நவதுவாரங்களும் உபயோகத்தில் இருக்கும் நேரத்தில் வெடிக்கச் செய்வாள்......உடல்கள் சுக்கல் சுக்கலாக காற்றில் பறக்கும்.இதே போல் ஒவ்வொரு முறையும் நடந்தது ....உள்ளிருக்கும் வெடியை பற்றி ஆவாக்கள் அறிந்திருக்கவில்லை....எதிர்ப்பாளன் எவனோ வெடி வீசியிருக்கிறான் என்றோ .....மேற்கத்தியர்கள் ஏதேனும் நவீன சதி ஆயுதம் ஏவுகி றார்களோ..., என்றே நினைத்துக் கொண்டிருந்ததால் ...பணி செவ்வனே நடந்துக் கொண்டிருந்தது !

இது வரை கோட்டையைத் தாண்டி மலம் வெளியில் விழுந்ததில்லை.! ஆனால் வெளியிலோ, என்றுமே .... உண்டால் தானே வெளிவர? எனினும் ..சிலநாட்களாக....மலம்...சதை....ரத்தம் கலந்த வஸ்துக்கள்.....வாஸ்து பார்க்காமல் நாலாபுறமும் வந்து விழ தொடங்கி விட்டது !.இது வரை ரத்த வாடை மறந்திருந்த கொசுக்கள்....தேடி வந்து....சதை துணுக்குகளில் ஒட்டியிருந்த ரத்த துளிகளை ஆவேசமாக உறிஞ்சின ! நெடுந்தொலைவிலிருந்து பன்றிகள் வந்து ...கறியுடன் கலந்த மலத்தை மட்டும் தனித்து நக்கி ....ஆர்வத்துடன் சத்தமிட்டபடி ..சப்பி சப்பி சாப்பிட்டன ! புது விருந்தினர்களால் தன் பங்குக்கு பாதகமில்லை என்று நாய் உணர்ந்துக் கொண்டு....ரத்தமும் , மலமும் எடுக்கப்பட்ட சுத்தமான கறியை ...எலும்பு துணுக்குகளோடு ...நர..நர வென கடித்து தின்று விட்டு....இடை இடையே சந்தோஷமாக ஊளையிட்டது !



வானம் இப்போது சற்று கருமை குறைந்து ....கொஞ்சம் வெளிச்சக்கீற்று தென்பட்டாற் போலிருந்தது !

No comments:

Post a Comment