'எ நாவல் டைம்' என்கிற மாத நாவல் புத்தகத்தில் பாலகுமாரன் அவர்கள் எழுத ஆரம்பித்ததும் தான் என் ஆன்மீக வாழ்க்கை சற்று வேகமெடுக்கத் தொடங்கியது ! பள்ளி பருவத்தில் கையில் ...அவ்வளவாக பணம் இருக்காததால் ...அவரது நாவல்கள் ஏதேனும் நூலகத்திலோ....தொடர்கதைகளிலோ தான் படிக்க முடியும் ! ஆனால் பாக்கெட் நாவல் அசோகன் அவர்கள் ஒரு புரட்சியாக ...ஏழைக்கேத்த எள்ளுருண்டையாக ....'நாவல் டைம்' போட ஆரம்பித்ததும் ...மிக மகிழ்ச்சி அடைந்த மக்களில் நானும் ஒருவன் ! ஆனால் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களை விலக்கியதில் சற்று வருத்தமும் கூட ! சமூக படைப்புகளாக எழுத ஆரம்பித்த பாலகுமாரன் அவர்கள் ....சிறிது சிறிதாக ஆன்மீகத்தில் நுழைய ஆரம்பித்த நேரம் அது....ஆக, குறைந்த விலை...நிறைந்த இன்பமாக ... எனது ஆன்மீக படலம் ...மேலும் மெருகேறத் தொடங்கியது !
பாலகுமாரன் அவர்களின் நாவல்களில் அடிக்கடி ...குருவைப் பற்றி குறிப்பிட்டு அதன் அவசியத்தை வலியுறுத்துவதை ...படிக்கும் போதெல்லாம் ...நாமும் ஒரு குருவை தேடிக் கண்டுக் கொள்ள வேண்டும்...என்றெல்லாம் நினைப்பேன் ! அவரது குரு 'யோகி ராம்சுரத்குமாரை ' பற்றி அடிக்கடி குறிப்பிடுவதால் மிகுந்த ஆர்வம் கொண்டு ....ஒரு நாள் திருவண்ணாமலைக்கு சில நண்பர்களுடன் பயணிக்க ஆரம்பித்தேன் ! ஒரு முகவரி கிடையாது...ஏற்கனவே சென்ற அனுபவமும் இல்லை...ஆன்மீக ஆர்வக் கோளாறு !
பள்ளியில் சிறப்பு பயிற்சி என்று அதிகாலையிலேயே வீட்டிலிருந்து சொற்ப பணத்துடன் கிளம்பி விட்டோம்.பண்ருட்டியில் இறங்கி காலை உணவை ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்...பாதி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே ...தி.மலைக்கு பேருந்து வந்து விட்டது ...இதை விட்டால் இன்னும் ஒரு மணி நேரம் ஆகும் என்று சொன்னதால்...எங்கள் கொள்கைப்படி வீணாக்காமல் ...பாதி சாப்பிட்ட தோசையை கொஞ்சம் சட்னி ..சாம்பாரில் புரட்டி... கையில் சுருட்டிக் கொண்டு அப்படியே ஏறி விட்டோம் !. நாகரீகம் பார்த்தால்...வயிற்றுப் பாட்டுக்கு என்ன செய்வது..?..எங்கள் வீட்டில் ஒன்றும் பணம் கொடுத்து அனுப்பவில்லையே....ஏதோ....பழைய இரும்பு,பேப்பர் ..போன்றவைகள் தான் எங்கள்' பயண -ஆதாரங்களாக' விளங்கின ! ஒரு வழியாக சாப்பிட்டு முடித்து விட்டு பார்த்தால்...கை கழுவ ....தண்ணியை யாரும் வைத்திருக்கவில்லை .... நாங்கள் எல்லோரும் ...அணிந்த உடை...வீசிய கை ...என்று வலம் வரும் பயணிகள் ! பின் பொறுமையாக ...ஒவ்வொரு விரலாக.....உள்ளங்கையின் ஒரு பகுதி விடாமல் ..நாவினால் நக்கி ...நக்கி....பரிசுத்தமான கையாக்கி விட்டோம் ! வித்தியாசமான ஜந்துக்களை தரிசிப்பது போல பயணிகள் பார்த்தனர்....நடத்துனரும் ...ஒரு மாதிரியாகப் பார்த்துக் கொண்டே ....கை படாமல் பணத்தை வாங்கிக் கொண்டு டிக்கெட்டை கொடுத்தார் ! பாக்கி சில்லறையை அவர் கொடுத்ததும் தான் .... தூக்கி வாரிப் போட்டது எங்களுக்கு !
பண்ருட்டிக்கு பிறகு...ஏதோ அரைமணி நேரம் அல்லது ஒரு மணி நேர பயணத்தில் தி .மலைக்கு சேர்ந்து விடலாம் என்று நாங்களாகவே நினைத்துக் கொண்டிருந்தோம் ...ஆனால் மேற்கொண்டு 3 மணி நேரத்திற்கு மேல் பயணம் ! அது கூடப் பரவாயில்லை ...எங்கள் பயணத்திற்கான up & down travel planல் ...up க்கே பெரும்பான்மை சரியாகி விட்டிருந்தது ! சரி தான்.....உணவுத் திருவிழா ...இனி ஊருக்கு திரும்பும் வரை வேண்டாம்....கோவிலில் ஏதேனும் பிரசாதம் கிடைக்காதா என்ன ?, என்று மனதை தேற்றிக் கொண்டோம் ! பஸ்ஸில் சில figure கள் இருந்தாலும் .... இது ஆன்மீக பயணம் என்பதால் 'சைட்' அடிக்கக் கூடாது என்று ஒருவொருக்கொருவர் சொல்லிக் கொண்டு....ஆனால் ரகசியமாக பார்த்துக் கொண்டு ....பயணத்தை தொடர்ந்தோம் !
நாவலில் படித்த மாதிரியே...கோவிலுக்கு அருகிலேயே...தேரடி தெருவைக் கண்டுக் கொண்டோம் ! வாழ்க்கையிலேயே...மறக்க முடியாத நிகழ்வு அது ! நீங்களும் அனுபவித்து இருப்பீர்கள் ! நம்மை பாதித்த ....கதையில் படித்த மாந்தர்களை நிஜத்தில் சந்திக்கும் போது ....ஏற்படும் உள்ளக் கிளர்ச்சிகள் .... ஆஹா ...அதை சொல்ல மாளாது ! அதை..நன்கு அனுபவித்து....அந்த உணர்வு குன்றாமல்.....நிதானமாக அந்த வீட்டை நெருங்கி ...தயங்கி நின்றோம் ! வாசலில் அவ்வளவாக கும்பல் இல்லை....உள்ளே சிறிது கும்பல் இருந்தது .எவ்வளவு கெஞ்சினாலும் ....சிலரை...சாமி உள்ளே விட மாட்டார் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்...நமக்கும் அது போல் ஆகி விடுமோ....இவ்வளவு தூரம் வந்து ...தரிசிக்காமல் போய் விடுவோமோ .... என்றெல்லாம் பயந்தேன் !அவர் நம்மை பார்க்கவில்லை என்றால்...நாம் ஆன்மீகத்திற்கு லாயக்கில்லை என்று அர்த்தம்...என்று...சமீபத்திய 'சிவாஜி' டயலாக் மாதிரி ...ஆத்திகப் பாதையா...நாத்திகப் பாதையா ...என்று முடிவு செய்துக் கொள்ளலாம் ..என்றெல்லாம் எண்ணினேன் ! ரொம்ப ஓவராயிருக்கோ..!?
நீண்ட நேரமாக நின்றுக் கொண்டிருக்கும் போது ...பார்க்க வரும் மக்கள் ..கூடை கூடையாக ..பழங்கள்...மலர்கள்...மாலைகள்....என்று ஏகப்பட்ட விஷயங்களோடு வந்திருந்தார்கள் ! குரு ,தெய்வம்,குழந்தை,நோயுற்றோர் ,பெரியோர் ...இவர்களை பார்க்கும் போது வெறும் கையுடன் செல்லாலாகாது ...ஏதேனும் பரிசுகளோடு அல்லவா செல்ல வேண்டும் என்பது உரைத்தது ! ஆனால் இருப்பதோ சொற்ப பணம் ....யோசித்த போது ...பாலகுமாரன் ஜி ...சுவாமி 'சார்மினார்' சிகெரெட் புகைப்பார் என்று சொல்லி இருந்தார் ...சரி என்று ..ஒரு பாக்கெட் வாங்கி வைத்துக் கொண்டேன் ! சிறிது நேரத்தில்எங்கள் குழுவை உள்ளே போகச் சொன்னார்கள் ...ஆனால் நீண்ட நேரமாக ..ஒரு வயதான பெண் கெஞ்சிக் கொண்டிருந்தார் ...உள்ளே விடவில்லை...பாவமாக இருந்தது !
சிறிய வீடு....உள்ளே மங்கிய வெளிச்சம் ...." யோகி ராம் சுரத் குமார்....யோகி ராம் சுரத் குமார்.....ஜெய குரு ராயா "....தொடர்ந்து இனிமையான குரலில் ஒரு பக்தையால் பாடப்பட்டு கொண்டிருக்க ... 'அது ' அமைதியாக புகை பிடித்தபடி ....அமர்ந்திருந்தது ! மெல்ல அருகே சென்று ...அமர்ந்து...சிகரெட் பெட்டியை அருகே வைத்து ...வணங்கினோம் ! "பட் ...பட் " என்று ....வலது கையால் எங்கள் இடது முதுகில் அடி விழுந்தது....மெலிதாகவும் இல்லாமல் .... வலுவாகவும் இல்லாமல்....ஒரு தினுசான அடி ! எங்களுக்கு திராட்ச்சை பழம் கொடுத்து விட்டு ....கிளம்ப சொன்னார் சைகையில் ....சிகரெட் பெட்டியை காட்டினேன் ....சரேலென்று தனது புறங்கையால் எங்களிடமே தள்ளி விட்டார் ! பயந்துக் கொண்டு சிகெரெட் பாக்கெட்டை எடுத்து கொண்டு வெளியேறினோம் !
வெளியே வந்த போது...அந்தக் வயதான பெண்...எங்களை பரிதாபமாகப் பார்த்தார் .....வாசலில் நின்ற பையன் இப்போதும் அவரை விடவில்லை ! ஒரு பெரிய ஆச்சரியம் ..... உள்ளே இருக்கும் யோகி .... இந்தப் பையனை எப்படி தொடர்பு கொள்கிறார் ...எந்த அடிப்படையில் ஆட்களை உள்ளே அனுப்பினார்கள் என்று ...இன்று வரை எனக்குத் தெரியவில்லை ! என்னை அனுமதித்ததன் மூலம் ...எனக்கு ஆன்மீக அங்கீகார அகங்காரம் சற்று ஏற்பட்டு...சற்றே தூக்கிய புருவங்களுடன் நடக்க ஆரம்பித்தோம் !
இன்னும் சில சித்தர்கள் மலையில் வசிப்பதாகக் கேள்விப்பட்டு....ரமணாஸ்ரம் வழியாக மலைக்கு செல்லும் பாதை அறிந்து ...மேலே செல்ல ஆரம்பித்தோம் ! பசி...தாகம் எதுவுமே தெரியவில்லை....தேடல் வெறி ! இதைத் தாண்டிய வெறியுடன் சுவாமி விவேகானந்தர் இருந்திருக்கிறார் ...சிக்காகோ செல்வதற்கு முன்...சுவாமி பல ஊர்களுக்கும் அலைந்து திரிந்துக் கொண்டிருக்கும் போது .... வறுமை சூழ்ந்த ஊர்களில்...கருங்கல் போன்ற ...கடிக்கவே முடியாத கடின ரொட்டியை இவர்களுக்கு கொடுப்பார்களாம்...பசியாற ! அதை துணியில் கட்டி எடுத்துக் கொண்டு ....பசிக்கும் நேரங்களில் ...குளம் போன்ற நீர்நிலைகளில் சிறிது நேரம் ஊற வைத்து .....கொஞ்சம் கொஞ்சமாக கடித்து உண்பார்களாம் ! அதற்கே ..பல் வலி கண்டு ...ஈறில் ரத்தம் கசியுமாம் !
செந்நீர் ஊற்றி வளர்த்த ஆன்மிகம் ! இன்று விவேகானந்தர் பிறந்த தினத்திற்கு பொருத்தமாக இந்த பத்தி அமைந்து விட்டது !
யோகி தொட்டுக் கொடுத்த 'பிரசாத சிகரெட்டை'...வீணாக்காமல் ஊத ஆரம்பித்தோம் ! மலையில் மிக சிலரையே காண முடிந்தது...ஆங்காங்கே ஒரு சில வெளிநாட்டு பெண்கள் தவம் செய்துக் கொண்டிருந்தனர் ! கூட வந்த நண்பர்கள் அனைவரும் அவர்களை வெறிக்கப் பார்த்து ...கிண்டல் செய்தனர் ! ஆன்மீகத்தை உய்விக்க..? வந்ததாக நினைத்துக் கொண்டிருந்த எனக்கு கோபம் ஏற்ப்பட்டது ...வேண்டாம் ..என்றேன்...அவர்கள் கேட்கவில்லை ...அதிகமாக்கினர் ! அப்போது தோன்றியது....குழுவுடன் செல்ல இது மலையேற்றம் அல்ல....மனமேற்றம் ...அதற்க்கு தனிமையே சாலச் சிறந்தது ....இனி தனி பயணம் தான் என்று முடிவு செய்தேன் ! பிறகு ஒரு வழியாக ...அவர்கள் கவனம் திசை மாற்றி ...மலை உச்சிக்கு வந்தோம். அங்கிருந்து சாலையை பார்த்தோம்...பேருந்துகள் நகரும் ஊர்வனங்களாக தெரிந்தன....அந்த நேரத்தில் என் பெற்றோர் ஞாபகம் வந்தது...சொல்லாமல் ....கொள்ளாமல் >150km தாண்டி வந்திருக்கிறோம்....என்னை இந்த இடத்தில் பார்க்க வேண்டாம்.....இதையெல்லாம் கேள்விப்பட்டாலே மயங்கி விழுந்து விடுவர் ! கூட வந்தோர் விடுதி மாணவர்கள் என்பதால் ..அவர்களுக்கு இதெல்லாம் சாதாரண விஷயம் .... நிதி உதவி மட்டும் என்னுடையது !
திடீரென்று பாதை முடிந்திருந்தது....அதற்கு மேல் போக வழியும் தெரியவில்லை ....சிறிது தேடலுக்கு பின் வலது பக்கம் சரேலென்று கீழே இறங்கும் ஒரு பாதை தென்பட்டது....ஆனால் கொஞ்சம் அபாயகரமாயிருந்தது ! சரி வந்த வழியே திரும்பலாம் என்றால் ....அது 'வினை முடித்தன்ன இனியள் ' என்பதற்கு அழகல்ல என்ற சுய கௌரவ ஈகோ ! மலையேறும் போது செருப்பு அணியாமல் செல்ல வேண்டும் என்று ... வாசலிலேயே சொல்லி இருந்ததால் அதன் படி கையில் எடுத்துக் கொண்டு தான் நடந்து வந்தோம்...ஆனால் இந்த சரிவில் அதற்க்கு சாத்தியமில்லை என்று காலில் மாட்டிக் கொண்டு ...கவனமாக....இறங்கி விட்டோம் ! வழியில் ...தீபம் ஏற்றும் அந்த பெரிய கொப்பரை பார்த்தோம் .... மிகப் பெரிய அண்டா போல இருந்தது ! தேரின் வடக் கயிறு போல் ..பெரிதாக துணி சுற்றி திரியாக்குவார்களாம் !
"யாக்கை திரி .... காதல் சுடர் ! .... பிறவி பிழை....காதல் திருத்தம் ! " என்கிற வைர முத்துவின் வைர வரிகள் இப்போது தோன்றுகிறது ! ஆன்மிகம் காதலாக வேண்டும் ... காதலுக்கு எப்படி உள்ளார்ந்து தயார் ஆகி ... கசிந்துருகுகிறோமோ ..அது போல ! குரு - காதல் - ஆன்மிகம் .... மூன்றும் மனித வாழ்க்கையின் இன்றியமையாத விஷயங்கள் ... மனிதன் முழுமையடைவதும் இவைகளால் தான் ! அடடே...ரொம்ப சொற்பொழிவாப் போய்கிட்டிருக்கே .....சரி...சரி ! மலை இறங்கு படலம் முடிந்த போது ...பொழுது சாய்ந்து விட்டிருந்தது ...மெலிதாக பீதி வந்தது....வீடு திரும்புவதற்குள் நள்ளிரவாகி விடுமே ! ஊர் வந்து சேரும் வரை யாரிடமும் பேசாமல்....மௌன சாமியாகவே வந்தேன்...."வீட்ல திட்டுவாங்கன்னு பயமாயிருக்கா" ,என்று நண்பர்கள் கேட்டதற்கு...இல்லை நான் தியானம் ? செய்துக் கொண்டிருக்கிறேன்....என்று Build - Up கொடுத்து விட்டு...மனசுக்குள் திக்..திக் என்றிருந்தேன் !
ஒருவழியாக ஊர் வந்து சேர்ந்தோம்....நண்பர்களை பள்ளி விடுதிக்கு அனுப்பி விட்டு ...பேருந்து நிலையத்திலிருந்து வந்துக் கொண்டிருக்கும் போது "டன் ..டங் ..டன்...டன " என்று கொத்து புரோட்டா போடும் ....இனிய கானம்.... அருகிலுள்ள பரோட்டாக் கடையிலிருந்து கேட்டது ! வெளியில் போகும் போதெல்லாம் ...'என்னுதில்லே..' என்று ஒரு Emergency fund ஐ உள் நிஜாரில் எப்போதும் வைத்திருப்பது..... 'இப்போது' ஞாபகம் வந்தது ! யோகியை பார்த்திருக்கிறோம்....மலை ஏறி ...சாமி கும்பிட்டிருக்கிறோம்....'கவுச்சி' சாப்பிடலாமா...என்கிற யோசனை வேறு ! யோகிகள்...சித்தர்களே....கஞ்சா புகையை இழுக்கிறார்கள் ....அதை சிவ பானம் என சொல்கிறார்கள்....யாகத்தில் மாமிசம் படைத்திருக்கிறார்கள் ....ஸ்ரீ ராமனே குகன் கொடுத்த மீனை ..தேனுடன் கலந்து உண்டிருக்கிறார்....ஆகவே அசைவம் ஆன்மீகத்திற்கு எதிரானது அல்ல என்கிற பேரரிய சிந்தனையை ...என் காதில் ..சாட்..சாத்..தான் ஓதியது ! மதிய உணவு அருந்தாதது வேறு ..... ஏதோ ஒரு மாமாங்கம் சாப்பிடாதது போல் இருந்தது ! கடைசியில் ..... எப்போதும் போல் வாய்மை...சாரி ...வயிறு வென்றது !கடையின் உள்ளே சென்று....புரோட்டா...ஆப் பாயில் ...ஈரல் என்று சிக்கனமாக உணவை முடித்துக் கொண்டு....தாமதமாக வருவதால் ...வீட்டில் கிடைக்கப் போகும் பாட்டுக் கச்சேரிக்கும்....குத்து வரிசைக்கும் ...உடலையும் மனதையும் தயார் செய்துக் கொண்டு....தெம்புடன் அழைப்பு மணியை அடிக்க ஆரம்பித்தேன் !
ஆன்மீகப் படலம் -1 முற்றிற்று !
பாலகுமாரன் அவர்களின் நாவல்களில் அடிக்கடி ...குருவைப் பற்றி குறிப்பிட்டு அதன் அவசியத்தை வலியுறுத்துவதை ...படிக்கும் போதெல்லாம் ...நாமும் ஒரு குருவை தேடிக் கண்டுக் கொள்ள வேண்டும்...என்றெல்லாம் நினைப்பேன் ! அவரது குரு 'யோகி ராம்சுரத்குமாரை ' பற்றி அடிக்கடி குறிப்பிடுவதால் மிகுந்த ஆர்வம் கொண்டு ....ஒரு நாள் திருவண்ணாமலைக்கு சில நண்பர்களுடன் பயணிக்க ஆரம்பித்தேன் ! ஒரு முகவரி கிடையாது...ஏற்கனவே சென்ற அனுபவமும் இல்லை...ஆன்மீக ஆர்வக் கோளாறு !
பள்ளியில் சிறப்பு பயிற்சி என்று அதிகாலையிலேயே வீட்டிலிருந்து சொற்ப பணத்துடன் கிளம்பி விட்டோம்.பண்ருட்டியில் இறங்கி காலை உணவை ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்...பாதி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே ...தி.மலைக்கு பேருந்து வந்து விட்டது ...இதை விட்டால் இன்னும் ஒரு மணி நேரம் ஆகும் என்று சொன்னதால்...எங்கள் கொள்கைப்படி வீணாக்காமல் ...பாதி சாப்பிட்ட தோசையை கொஞ்சம் சட்னி ..சாம்பாரில் புரட்டி... கையில் சுருட்டிக் கொண்டு அப்படியே ஏறி விட்டோம் !. நாகரீகம் பார்த்தால்...வயிற்றுப் பாட்டுக்கு என்ன செய்வது..?..எங்கள் வீட்டில் ஒன்றும் பணம் கொடுத்து அனுப்பவில்லையே....ஏதோ....பழைய இரும்பு,பேப்பர் ..போன்றவைகள் தான் எங்கள்' பயண -ஆதாரங்களாக' விளங்கின ! ஒரு வழியாக சாப்பிட்டு முடித்து விட்டு பார்த்தால்...கை கழுவ ....தண்ணியை யாரும் வைத்திருக்கவில்லை .... நாங்கள் எல்லோரும் ...அணிந்த உடை...வீசிய கை ...என்று வலம் வரும் பயணிகள் ! பின் பொறுமையாக ...ஒவ்வொரு விரலாக.....உள்ளங்கையின் ஒரு பகுதி விடாமல் ..நாவினால் நக்கி ...நக்கி....பரிசுத்தமான கையாக்கி விட்டோம் ! வித்தியாசமான ஜந்துக்களை தரிசிப்பது போல பயணிகள் பார்த்தனர்....நடத்துனரும் ...ஒரு மாதிரியாகப் பார்த்துக் கொண்டே ....கை படாமல் பணத்தை வாங்கிக் கொண்டு டிக்கெட்டை கொடுத்தார் ! பாக்கி சில்லறையை அவர் கொடுத்ததும் தான் .... தூக்கி வாரிப் போட்டது எங்களுக்கு !
பண்ருட்டிக்கு பிறகு...ஏதோ அரைமணி நேரம் அல்லது ஒரு மணி நேர பயணத்தில் தி .மலைக்கு சேர்ந்து விடலாம் என்று நாங்களாகவே நினைத்துக் கொண்டிருந்தோம் ...ஆனால் மேற்கொண்டு 3 மணி நேரத்திற்கு மேல் பயணம் ! அது கூடப் பரவாயில்லை ...எங்கள் பயணத்திற்கான up & down travel planல் ...up க்கே பெரும்பான்மை சரியாகி விட்டிருந்தது ! சரி தான்.....உணவுத் திருவிழா ...இனி ஊருக்கு திரும்பும் வரை வேண்டாம்....கோவிலில் ஏதேனும் பிரசாதம் கிடைக்காதா என்ன ?, என்று மனதை தேற்றிக் கொண்டோம் ! பஸ்ஸில் சில figure கள் இருந்தாலும் .... இது ஆன்மீக பயணம் என்பதால் 'சைட்' அடிக்கக் கூடாது என்று ஒருவொருக்கொருவர் சொல்லிக் கொண்டு....ஆனால் ரகசியமாக பார்த்துக் கொண்டு ....பயணத்தை தொடர்ந்தோம் !
நீண்ட நேரமாக நின்றுக் கொண்டிருக்கும் போது ...பார்க்க வரும் மக்கள் ..கூடை கூடையாக ..பழங்கள்...மலர்கள்...மாலைகள்....என்று ஏகப்பட்ட விஷயங்களோடு வந்திருந்தார்கள் ! குரு ,தெய்வம்,குழந்தை,நோயுற்றோர் ,பெரியோர் ...இவர்களை பார்க்கும் போது வெறும் கையுடன் செல்லாலாகாது ...ஏதேனும் பரிசுகளோடு அல்லவா செல்ல வேண்டும் என்பது உரைத்தது ! ஆனால் இருப்பதோ சொற்ப பணம் ....யோசித்த போது ...பாலகுமாரன் ஜி ...சுவாமி 'சார்மினார்' சிகெரெட் புகைப்பார் என்று சொல்லி இருந்தார் ...சரி என்று ..ஒரு பாக்கெட் வாங்கி வைத்துக் கொண்டேன் ! சிறிது நேரத்தில்எங்கள் குழுவை உள்ளே போகச் சொன்னார்கள் ...ஆனால் நீண்ட நேரமாக ..ஒரு வயதான பெண் கெஞ்சிக் கொண்டிருந்தார் ...உள்ளே விடவில்லை...பாவமாக இருந்தது !
சிறிய வீடு....உள்ளே மங்கிய வெளிச்சம் ...." யோகி ராம் சுரத் குமார்....யோகி ராம் சுரத் குமார்.....ஜெய குரு ராயா "....தொடர்ந்து இனிமையான குரலில் ஒரு பக்தையால் பாடப்பட்டு கொண்டிருக்க ... 'அது ' அமைதியாக புகை பிடித்தபடி ....அமர்ந்திருந்தது ! மெல்ல அருகே சென்று ...அமர்ந்து...சிகரெட் பெட்டியை அருகே வைத்து ...வணங்கினோம் ! "பட் ...பட் " என்று ....வலது கையால் எங்கள் இடது முதுகில் அடி விழுந்தது....மெலிதாகவும் இல்லாமல் .... வலுவாகவும் இல்லாமல்....ஒரு தினுசான அடி ! எங்களுக்கு திராட்ச்சை பழம் கொடுத்து விட்டு ....கிளம்ப சொன்னார் சைகையில் ....சிகரெட் பெட்டியை காட்டினேன் ....சரேலென்று தனது புறங்கையால் எங்களிடமே தள்ளி விட்டார் ! பயந்துக் கொண்டு சிகெரெட் பாக்கெட்டை எடுத்து கொண்டு வெளியேறினோம் !
வெளியே வந்த போது...அந்தக் வயதான பெண்...எங்களை பரிதாபமாகப் பார்த்தார் .....வாசலில் நின்ற பையன் இப்போதும் அவரை விடவில்லை ! ஒரு பெரிய ஆச்சரியம் ..... உள்ளே இருக்கும் யோகி .... இந்தப் பையனை எப்படி தொடர்பு கொள்கிறார் ...எந்த அடிப்படையில் ஆட்களை உள்ளே அனுப்பினார்கள் என்று ...இன்று வரை எனக்குத் தெரியவில்லை ! என்னை அனுமதித்ததன் மூலம் ...எனக்கு ஆன்மீக அங்கீகார அகங்காரம் சற்று ஏற்பட்டு...சற்றே தூக்கிய புருவங்களுடன் நடக்க ஆரம்பித்தோம் !
இன்னும் சில சித்தர்கள் மலையில் வசிப்பதாகக் கேள்விப்பட்டு....ரமணாஸ்ரம் வழியாக மலைக்கு செல்லும் பாதை அறிந்து ...மேலே செல்ல ஆரம்பித்தோம் ! பசி...தாகம் எதுவுமே தெரியவில்லை....தேடல் வெறி ! இதைத் தாண்டிய வெறியுடன் சுவாமி விவேகானந்தர் இருந்திருக்கிறார் ...சிக்காகோ செல்வதற்கு முன்...சுவாமி பல ஊர்களுக்கும் அலைந்து திரிந்துக் கொண்டிருக்கும் போது .... வறுமை சூழ்ந்த ஊர்களில்...கருங்கல் போன்ற ...கடிக்கவே முடியாத கடின ரொட்டியை இவர்களுக்கு கொடுப்பார்களாம்...பசியாற ! அதை துணியில் கட்டி எடுத்துக் கொண்டு ....பசிக்கும் நேரங்களில் ...குளம் போன்ற நீர்நிலைகளில் சிறிது நேரம் ஊற வைத்து .....கொஞ்சம் கொஞ்சமாக கடித்து உண்பார்களாம் ! அதற்கே ..பல் வலி கண்டு ...ஈறில் ரத்தம் கசியுமாம் !
செந்நீர் ஊற்றி வளர்த்த ஆன்மிகம் ! இன்று விவேகானந்தர் பிறந்த தினத்திற்கு பொருத்தமாக இந்த பத்தி அமைந்து விட்டது !
யோகி தொட்டுக் கொடுத்த 'பிரசாத சிகரெட்டை'...வீணாக்காமல் ஊத ஆரம்பித்தோம் ! மலையில் மிக சிலரையே காண முடிந்தது...ஆங்காங்கே ஒரு சில வெளிநாட்டு பெண்கள் தவம் செய்துக் கொண்டிருந்தனர் ! கூட வந்த நண்பர்கள் அனைவரும் அவர்களை வெறிக்கப் பார்த்து ...கிண்டல் செய்தனர் ! ஆன்மீகத்தை உய்விக்க..? வந்ததாக நினைத்துக் கொண்டிருந்த எனக்கு கோபம் ஏற்ப்பட்டது ...வேண்டாம் ..என்றேன்...அவர்கள் கேட்கவில்லை ...அதிகமாக்கினர் ! அப்போது தோன்றியது....குழுவுடன் செல்ல இது மலையேற்றம் அல்ல....மனமேற்றம் ...அதற்க்கு தனிமையே சாலச் சிறந்தது ....இனி தனி பயணம் தான் என்று முடிவு செய்தேன் ! பிறகு ஒரு வழியாக ...அவர்கள் கவனம் திசை மாற்றி ...மலை உச்சிக்கு வந்தோம். அங்கிருந்து சாலையை பார்த்தோம்...பேருந்துகள் நகரும் ஊர்வனங்களாக தெரிந்தன....அந்த நேரத்தில் என் பெற்றோர் ஞாபகம் வந்தது...சொல்லாமல் ....கொள்ளாமல் >150km தாண்டி வந்திருக்கிறோம்....என்னை இந்த இடத்தில் பார்க்க வேண்டாம்.....இதையெல்லாம் கேள்விப்பட்டாலே மயங்கி விழுந்து விடுவர் ! கூட வந்தோர் விடுதி மாணவர்கள் என்பதால் ..அவர்களுக்கு இதெல்லாம் சாதாரண விஷயம் .... நிதி உதவி மட்டும் என்னுடையது !
திடீரென்று பாதை முடிந்திருந்தது....அதற்கு மேல் போக வழியும் தெரியவில்லை ....சிறிது தேடலுக்கு பின் வலது பக்கம் சரேலென்று கீழே இறங்கும் ஒரு பாதை தென்பட்டது....ஆனால் கொஞ்சம் அபாயகரமாயிருந்தது ! சரி வந்த வழியே திரும்பலாம் என்றால் ....அது 'வினை முடித்தன்ன இனியள் ' என்பதற்கு அழகல்ல என்ற சுய கௌரவ ஈகோ ! மலையேறும் போது செருப்பு அணியாமல் செல்ல வேண்டும் என்று ... வாசலிலேயே சொல்லி இருந்ததால் அதன் படி கையில் எடுத்துக் கொண்டு தான் நடந்து வந்தோம்...ஆனால் இந்த சரிவில் அதற்க்கு சாத்தியமில்லை என்று காலில் மாட்டிக் கொண்டு ...கவனமாக....இறங்கி விட்டோம் ! வழியில் ...தீபம் ஏற்றும் அந்த பெரிய கொப்பரை பார்த்தோம் .... மிகப் பெரிய அண்டா போல இருந்தது ! தேரின் வடக் கயிறு போல் ..பெரிதாக துணி சுற்றி திரியாக்குவார்களாம் !
"யாக்கை திரி .... காதல் சுடர் ! .... பிறவி பிழை....காதல் திருத்தம் ! " என்கிற வைர முத்துவின் வைர வரிகள் இப்போது தோன்றுகிறது ! ஆன்மிகம் காதலாக வேண்டும் ... காதலுக்கு எப்படி உள்ளார்ந்து தயார் ஆகி ... கசிந்துருகுகிறோமோ ..அது போல ! குரு - காதல் - ஆன்மிகம் .... மூன்றும் மனித வாழ்க்கையின் இன்றியமையாத விஷயங்கள் ... மனிதன் முழுமையடைவதும் இவைகளால் தான் ! அடடே...ரொம்ப சொற்பொழிவாப் போய்கிட்டிருக்கே .....சரி...சரி ! மலை இறங்கு படலம் முடிந்த போது ...பொழுது சாய்ந்து விட்டிருந்தது ...மெலிதாக பீதி வந்தது....வீடு திரும்புவதற்குள் நள்ளிரவாகி விடுமே ! ஊர் வந்து சேரும் வரை யாரிடமும் பேசாமல்....மௌன சாமியாகவே வந்தேன்...."வீட்ல திட்டுவாங்கன்னு பயமாயிருக்கா" ,என்று நண்பர்கள் கேட்டதற்கு...இல்லை நான் தியானம் ? செய்துக் கொண்டிருக்கிறேன்....என்று Build - Up கொடுத்து விட்டு...மனசுக்குள் திக்..திக் என்றிருந்தேன் !
ஒருவழியாக ஊர் வந்து சேர்ந்தோம்....நண்பர்களை பள்ளி விடுதிக்கு அனுப்பி விட்டு ...பேருந்து நிலையத்திலிருந்து வந்துக் கொண்டிருக்கும் போது "டன் ..டங் ..டன்...டன " என்று கொத்து புரோட்டா போடும் ....இனிய கானம்.... அருகிலுள்ள பரோட்டாக் கடையிலிருந்து கேட்டது ! வெளியில் போகும் போதெல்லாம் ...'என்னுதில்லே..' என்று ஒரு Emergency fund ஐ உள் நிஜாரில் எப்போதும் வைத்திருப்பது..... 'இப்போது' ஞாபகம் வந்தது ! யோகியை பார்த்திருக்கிறோம்....மலை ஏறி ...சாமி கும்பிட்டிருக்கிறோம்....'கவுச்சி' சாப்பிடலாமா...என்கிற யோசனை வேறு ! யோகிகள்...சித்தர்களே....கஞ்சா புகையை இழுக்கிறார்கள் ....அதை சிவ பானம் என சொல்கிறார்கள்....யாகத்தில் மாமிசம் படைத்திருக்கிறார்கள் ....ஸ்ரீ ராமனே குகன் கொடுத்த மீனை ..தேனுடன் கலந்து உண்டிருக்கிறார்....ஆகவே அசைவம் ஆன்மீகத்திற்கு எதிரானது அல்ல என்கிற பேரரிய சிந்தனையை ...என் காதில் ..சாட்..சாத்..தான் ஓதியது ! மதிய உணவு அருந்தாதது வேறு ..... ஏதோ ஒரு மாமாங்கம் சாப்பிடாதது போல் இருந்தது ! கடைசியில் ..... எப்போதும் போல் வாய்மை...சாரி ...வயிறு வென்றது !கடையின் உள்ளே சென்று....புரோட்டா...ஆப் பாயில் ...ஈரல் என்று சிக்கனமாக உணவை முடித்துக் கொண்டு....தாமதமாக வருவதால் ...வீட்டில் கிடைக்கப் போகும் பாட்டுக் கச்சேரிக்கும்....குத்து வரிசைக்கும் ...உடலையும் மனதையும் தயார் செய்துக் கொண்டு....தெம்புடன் அழைப்பு மணியை அடிக்க ஆரம்பித்தேன் !
ஆன்மீகப் படலம் -1 முற்றிற்று !
No comments:
Post a Comment