Thursday, 7 March 2013

சிவனும்... சூலமும் !!

சிவன் கையில் சூலாயுதம் எதற்கு என்று நண்பர்கள் பேசிக் கொண்டிருந்ததை பார்த்தேன் !

......நான் ஆத்திகனும் அல்ல...நாத்திகனும் அல்ல ....

கொலை செஞ்சா தான் கையில ரத்தம் இருக்குமா .....பிரசவம் பார்த்த கையிலும் ரத்தம் இருக்கும் ! (நன்றி : ஜெயமோகன் )

அது போல சூலாயுதம்....இன்னபிற ஆயதங்களை கடவுள் வைத்திருப்பதற்கும் சூட்சம காரணங்கள் இருக்கிறது !

எல்லாம் ... எல்லோர்க்கும்.... எப்போதும் தெரிந்திருக்க வேண்டும் என்கிற அவசியம்..... தேவை இல்லாத ஒன்று என்றே உணருகிறேன் !

கடவுள், வழிபாடு என்பதெல்லாம்.....ஒவ்வொருவரின் தனிப்பட்ட நம்பிக்கையைக் கொண்ட விஷயம் !

எல்லா கடவுளையும் வணங்குவேன், ஒரே கடவுளை மட்டும் தான் வணங்குவேன் , எந்த கடவுளையும் வணங்க மாட்டேன் , என்னை மட்டுமே நம்புவேன் !

Fine ! பக்குவப்பட்ட நபர்களாயின் ...தன்னை மட்டும் நம்புவோர் .... அவர்களையே வழிபடுவோர் ஆவர் ....'நானே கடவுள்' போல !

நாத்திகம் பேசும் விஞ்ஞானம் .... இன்னும் பூமி சுழற்சிக்கு, தெளிவான....உறுதியான காரணம் கூற முடியவில்லை !

மனிதர்களில் தலைசிறந்த சிந்தனாவாதி , விஞ்ஞானி ஐன்ஸ்டீன் கூறுகிறார் "கடவுள் பிரபஞ்சத்துடன் பகடை ஆடவில்லை !"

இந்த பிரபஞ்சத்தில் இருக்கும், நடக்கும் ஒரு மிகச் சிறிய விஷயத்திற்கும் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கிறது சும்மா நடப்பதில்லை செயல்களும்,அதன் விளைவுகளும் !

No comments:

Post a Comment