நாவல்கள் திரைப்படமாகும் போது ....திரைக்கதை என்கிற பெயரில் ... நாவலின் சாராம்சமே உருமாறி .... திரைப்படமாக வரும் அபாயம் உண்டு !
பொதுவாகவே எழுத்தாளன் தன் கதாபாத்திரத்தின் குணத்தை மிக Rawஆக தான் பதிவு செய்து இருப்பான் ... நாவலில் அது மிக்க ஆளுமையுடன் இருந்திருக்கும் ! ஆனால் அதுவே .... திரையில் கொஞ்சம் நீர்த்துப் போய் விடும் !
உதாரணத்திற்கு.....'விக்ரம்' படத்தில்...கதாநாயகன் கமலிடம் ...நாயகி லிஸி (இப்போது இயக்குனர் ப்ரியதர்ஷனின் நாயகி) "ஆண்களுக்கு இணையா ...பெண்கள் எல்லாத்தையும் செய்வார்கள்" , என்று ஜம்பமாக சொல்வார்.மனைவி கொலை செய்யப்பட்ட விரக்தியில் வாழும் கமலோ ...கடுப்பாகி...: " எங்களுக்கு வேர்த்துச்சுனா போட்டிருக்குற சட்டையை கழட்டிக்கிட்டு ரோட்டுல நடந்து போவோம் ...நீங்க போவீங்களான்னு ..? ",கேட்பார் ! அதற்கே வெகுண்டு " நாகரீகம்...பண்பாடு இல்லாத ஆள் நீ ", என்று திட்டுவார் நாயகி !
ஆனால் இதே உரையாடல் ...மூலக்கதை 'விக்ரம்' நாவலில் ....கதாநாயகன் 'கீழ்க்கண்டவாறு' பேசுவான் ....
"அப்ப , நீங்க சுவத்துல ஒன்னுக்கு அடிப்பீங்களா " ! Bravo ...Writer ...
சுஜாதாவின் நினைவு தின (27 Feb ) பதிவு ! .
பிகு: ஆனால் , இன்னொரு காட்சியில் .... நாவலில் வருவது போலவே ,கமல்... "எந்த தே****பய என் பொண்டாட்டியைக் கொன்றான் ? "என்று கேட்பார் ! அந்தக் காட்சி வசனப் பதிவை கட் செய்யாமல் இருக்க ... 'சென்சார்களிடம்' எவ்வளவு கெஞ்சியிருப்பாரோ ..!?
No comments:
Post a Comment