நேற்றைய இணைய பரபரப்பாக பரதேசி படத்தின் 'ஷூட்டிங் ஸ்பாட்டில்' நடந்ததை வெளியிட்டிருந்தார்கள் . அதில் படத்தின் இயக்குனர் பாலா அவர்கள் , நடிப்பவர்களை கடுமையாக அடிக்கும் , உதைக்கும் காட்சிகளும் இடம்பெற்றிருந்தன ! இது ஒரு பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.சில மாதங்களாகவே...அரசியல் அல்லது சினிமா என்று மாற்றி ..மாற்றி நமக்கு 'சர்ச்சை ஷோ ' காட்டிக் கொண்டு உள்ளார்கள்.இந்த மீடியாக்களும் நம்மை ரொம்ப செல்லம் கொடுத்து , கெடுத்து வைச்சிருக்கு ! நமக்கும் பொழுதுபோக்குக்கு குறைவில்லாமல் போய்க் கொண்டு தான் இருக்கிறது ! சினிமா சர்ச்சையில் இது இயக்குனர்கள் காலம் போல...சர்ச்சையில் சிக்க ! கமல் அவர்களைத் தொடர்ந்து மணிரத்னம் , பிறகு அமீர் ... இப்போது பாலா !
அது எப்படி படம் வெளியிடும் சில தினங்களுக்கு முன்பு மட்டும் , கரெக்டா சர்ச்சை கிளம்புகிறது என்று யோசித்துப் பார்த்தால் .... ஏதேனும் ஆரம்பம் ஒன்று இருக்கும் ...... இப்போது பரதேசியின் 'ஷூட்டிங் ஸ்பாட் கிளிப்பிங் ' போல ! உண்மையில் . இந்த மாதிரியான ஆரம்ப 'மேட்டர்கள்' எல்லாம் ஒரு 'வெளம்பர மேட்டர்களுக்காகத்' தான் வெளியிடப்படுகின்றன ! ஆனால் நடப்பது என்னவென்றால் வரம் கொடுத்தவன் தலையிலேயே கையை வைக்கும் கதையாக ....புதியதோர் பிரச்சனைக்கும் காரணமாக ஆகி விடுகிறது ! விஸ்வரூபத்திற்கும் ,இதே கதை தான் ஆயிற்று, சற்று பரபரப்பு வரட்டும் என்று கமல் 'அசால்ட்டாக ' விட்டது கடைசியில் அவரே 'சாமர்சால்ட் ' அடிக்கும்படி ஆயிற்று ! எனினும் முடிவு சுபமே....இது எல்லோருக்கும் சாத்தியமில்லை ! புலியை பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதையாக நம்ம அமீர் 'சாமர்சால்ட்' அடித்து பார்த்து ,உடைந்து போனது தான் மிச்சம் ! பருத்தி வீரன் எடுத்தவரா இவர் ...'அசிஸ்டென்டுக்கள்' மாறி விட்டனரா.??
ஆக ... பாலாவே , ஒரு பரபரப்பு கிளம்பட்டும் என்று வெளியிட்டிருக்கும் இந்த காணொளி ,கடைசியில் மனித உரிமை மீறல் என்றெல்லாம் சர்ச்சை கிளம்பி இருப்பதை நிச்சயம் எதிர்ப்பார்த்திருக்க மாட்டார் அவர் ! தன்னையும் தனது படங்களையும் அதிக tough ஆக காட்டிக் கொள்வதில் அவருக்கு அலாதி பிரியம் ! ஆனால் இது தான் சாக்கு என்று , அவரது 'நலன் நினையார்' இப்படி ஒரு பிரச்சனையை கிளப்பிவிட்டு விட்டார்கள் !
பாலா அடிப்பது ஒரு 'செட்டிங்' செய்யப்பட கழி , சர்க்கஸில் நம்ம பபூன்கள் வைத்திருப்பது போல ! சத்தம் அதிகமாக இருக்குமேயன்றி அடி பலமாயிராது ! தேயிலை தோட்ட கொத்தடிமைகளை ,கங்காணி (Supervisor மாதிரி ) மிக கொடூரமாகத் தான் அடிப்பார்கள் என்று நிறைய படித்திருக்கிறேன் ! அது போன்ற ஒரு காட்சியைத் தான் பாலா , கங்காணியாக அடித்து ...உதைப்பது போல் நடித்துக் காட்டுகிறார், மற்றப்படி சரியாக நடிக்காததால் அடிப்பதல்ல அது ! ஒவ்வொரு கதாப்பாத்திரமும் எப்படி செய்ய வேண்டும் என்று , அந்தந்த கதாப்பாத்திரங்களுக்கு செய்துக் காட்டுகிறார் ! கங்காணி அடிக்கும் போது எப்படி வலியில் புரண்டு ... உருள வேண்டும் என்று தான் அதர்வாவும் செய்கிறார் , அவ்வளவு தான் ! தொடர்ச்சி இல்லாமல் ....ஓரிரு வினாடிகள் மட்டும் ஒவ்வொரு காட்சிகளும் எடிட் செய்து வேகமாக செல்வதால் , வேறு மாதிரி தெரிகிறது ! பொறுமையாக எல்லாக் காட்சிகளையும் ... திரும்ப ...திரும்ப...கூர்ந்து பார்த்தால் புரியும் !
நடிகர் சூர்யாவின் திருப்புமுனை படமான "நந்தா"வில் அவரின் ஆக்ரோஷமான நடிப்பைப் பார்த்து பாராட்டியவர்களிடம் சூர்யா சொன்னது என்னவென்றால் ," பாலா செய்தததில் கொஞ்சம் தான் நான் செய்ததது, ஒரு Animal மாதிரியான அவரோட Body Language பார்த்து எனக்கே பயமாக இருந்தது ", என்றார் ! இங்கு நாம் நந்தாவில் சூர்யாவின் மிரட்டும் நடிப்பை ... முக்கியமாக கல்லூரியில் அவர் போடும் அந்த முதல் Fight ! அப்ப பார்த்துக்குங்க பாலாவின் பயிற்சி எப்படின்னு !
என்ன இருந்தாலும் ....நம் சமுதாயத்தில் வாழும்....வாழ்ந்த கடை நிலை மக்களின் வாழ்கையை திரைப் படமாக எடுக்கும் இயக்குனர்களில் இவரும் ஒருவர் என்கிற மரியாதை இன்றளவும் உண்டு ! ..
ஒரு காலத்தில் தான் ,புதியவர்களை இயக்குனர் 'பின்னி' எடுப்பார்கள் என்று சொல்வார்கள் ! நம்ம பாரதிராஜா சார் செமையா அறைவார் என்று சொல்வார்கள் ... பாலசந்தர் சார் கூட கடுமையாகத் 'திட்டவும்' செய்வார் எனவும் கேள்வி ! ஒரு 'வெற்றி..' கரமான படத்தில் கூட பிரபல கதாநாயகரும் ,இயக்குனரும் ...நீயா...நானா .. என்று முகத்தில் குத்திக் கொண்டதாக செய்தி உண்டு ! நடிகைகளுக்கு வேறு மாதிரி அடிகள் விழும் என்று கிசு கிசுவும் உண்டு !
ஆதலால் சினிமாவில் இதெல்லாம் ஜகஜமப்பா !!
எந்த காலத்தில் நாம் வாழ்கிறோம்...ஒரு படம் ஹிட் ஆகி விட்டாலே...பந்தா காட்டி , சம்பளம் ஏற்றி வாழும் நடிகர்கள் இப்போது ! அப்படி எல்லாம் சாதரணமாக,அடிக்கவோ ஏன் திட்டக் கூட முடியாது ! சில வருடங்களுக்கு முன்பு கூட விரல் வித்தை நடிகர், 'டாட்டா சுமோ' இயக்குனரை...படப்பிடிப்பின் போது ,இயக்குனர் மற்றவர்களிடம் பேசும் போதெல்லாம் ...அவர் பின்னால் நின்றுக் கொண்டு அவரை மாதிரியே செய்துக் காட்டி ' டீஸ்' பண்ணிக் கொண்டிருந்தார், ஒரு கட்டத்தில் இயக்குனர் சட்டென்று திரும்பி விட....கடுப்பாகி விரல் நடிகரை எச்சரித்த பிறகு தான் அடங்கினார் ! இது தான் இன்றைய நிலைமை !
பாலாவை விமர்சிப்பது போல் ஆரம்பித்து கடைசியில் வக்காலத்து வாங்குவது போல் இருக்குதே என்று நினைப்பவர்க்கு.....
எனது சகோதரர் ஒருவர் வடபழனி விஜயா மருத்துவமனையில் பணி புரிந்த போது அவருடன் பணியாற்றிய மருத்துவ நண்பர் விடுமுறை நேரங்களில் அவரது உறவினரான பாலாவின் ரூமுக்கு என் சகோதரருடன் செல்வார்.உதவி இயக்குனராக பாலா இருந்த சமயம் அது....என் சகோதரிடமும் நன்கு அறிமுகமாகி ...அவரை சிறப்பாக சரக்கு+விருந்தோம்பல் செய்து கவனித்திருக்கிறார் ! இந்த விஷயம் எனக்கு மிகத் தாமதமாகத் தான் தெரிந்து , நான் அடித்து பிடித்து அசோக் நகர் அருகே இருந்த அவர் அலுவலகத்துக்கு சென்ற போது அவர் இயக்குனராக உயர்ந்து உச்சத்தில் இருந்தார் ! அவரது உறவினர் மற்றும் எனது சகோதரர் பெயர் சொல்லி பேசலாம் என்று பார்த்தால் ....அவரை சந்திக்கவே முடியவில்லை ! என் சகோவும் ,பாலா உறவினரும் கூட சென்னையில் இருந்து தத்தம் ஊருக்கு கிளம்பி விட்டிருந்தனர் ! ஒரு நாள் ராத்திரி ,பயங்கர கடுப்பாகி ...வடபழனி அய்யனார் ஒயின்ஸ்சில் சரக்கடித்து விட்டு நண்பர்களுடன் பாலா ஆபீஸ் வாசலில்..."யோவ் பாலா .... நீ என்ன பெரிய .....லா ?" ...( அதாங்க பீலா...பீலா ! !) அப்படின்னு நண்பர்களோட சத்தம் போட்டு விட்டு வந்தேன் .... பூட்டியிருந்த ஆபீஸைப் பார்த்து !
No comments:
Post a Comment